ஆப்கானிஸ்தான் பாமியன் எனும் மாகாணத்தில் பீட்டர் ரெனால்ட்ஸ்- பார்பி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் கல்வி மற்றும் பயிற்சி அமைப்பு நடத்தி வந்தனர். கடந்த பிப்.,1ஆம் தேதியன்று தம்பதியினர் வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியபோது காரணம் இன்றி கைது செய்யப்பட்டனர். இதனால் அவர்களை விடுவிக்க கோரி தலிபான்களிடம் கத்தார் அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

இந்த நிலையில் தொடர் வற்புறுத்தலின் அடிப்படையில் தம்பதியினரை தலிபான் அரசானது விடுதலை செய்திருக்கிறது. அதன்பின் தம்பதியினர் காபுலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் ஆப்கானிஸ்தானின் சட்டத்தை மீறியதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு தம்பதியினர் விடுவிக்கப்பட்டனர்.