சமீபத்தில் சமூக வலைதளங்களில் பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் ஒரு வீடியோவில், ஒருவர் உதவி என்ற பேரில் செய்த செயல், அதிர்ச்சியூட்டுவதோடு, பார்க்கும் நபர்கள் சிரிப்பை தடுக்க முடியாத நிலைக்கு சென்றுவிடுகிறார்கள்.
दुनिया मे आज भी अच्छे इंसानों की कमी नही है 😜🤣
अगर आप इनकी जगह होते तो क्या करते ? pic.twitter.com/YU8Z77VwLc— Jason Bourne (@jasonbourne0101) September 17, 2025
இந்த வீடியோவில், ஒரு பெரிய லாரி சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் அதிகளவிலான இரும்புக் கம்பிகள் ஏற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த சுமை ஒரே பக்கமாக சாய்ந்திருப்பது போல் தெரிகிறது. இதனால், பின்னால் வரும் வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் லாரி எப்போது கவிழும் என பயந்து, அதை தனது மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ரெண்டு மணி நேரமா இந்த லாரியை பின் தொடர்றோம். வீடியோ எடுக்க இல்ல, எப்ப கவிழும்னு தெரியலையே…” என பேசும் குரல்கள் கேட்கப்படுகின்றன.
அவர்களின் உரையாடலில் இருந்து, அந்தப் பயணிகள் பயமுடன் இருப்பதோடு, அவசியமென்றால் உடனடி உதவிக்காக தயாராக உள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. “இதப்பத்தி யாரும் கவனிக்கலனா, கவிழ்ந்தா யார் உதவப்போறது?” என்ற எண்ணத்தில், அவர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு, அந்த லாரியை பின்தொடர்ந்துள்ளனர். இது ஒரு விபத்துக் காணொளி அல்ல, மாறாக மனிதநேயம் நிரம்பிய ஒரு எடுத்துக்காட்டு என்று தான் சொல்றாங்க.
