இந்திய விமானப்படையில் பணியாற்றிய மகனின் மரணத்திற்கு பின், சிறப்பு குடும்ப ஓய்வூதியம் பெற தீர்மானித்த வளர்ப்பு தாயின் மனுவை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்த்து வாதிட்டது. “ஓய்வூதியம் என்பது பொது நலத்திற்கான பரிசு அல்ல, அது உரிமை என்றாலும், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் தான் உரியவர்கள் பெற முடியும்” என்று தெரிவித்த மத்திய அரசு, “வளர்ப்பு தாயை, இயற்கை தாயுடன் சட்ட ரீதியாக ஒப்பிட முடியாது” என்றது.

நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பூய்யன் மற்றும் கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வில், மத்திய அரசு பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோளாகக் கொண்டு, “மாதா” என்ற சொல் இயற்கை தாயை குறிக்கும், வளர்ப்பு தாயை அல்ல” என வாதிட்டது. இதன் அடிப்படையில், ஜெயஸ்ரீ வை. ஜோகி என்பவருக்கு, Armed Forces Tribunal வழங்கிய மறுப்பை மத்திய அரசு உறுதிப்படுத்தியது. ஜோகி கூறுவதாவது, உயிரிழந்த வீரரை அவர் ஆறு வயது முதல் வளர்த்து வந்ததாகவும், பிற தாய் மரணித்த பிறகு தந்தை இவரை திருமணம் செய்ததாக இருந்தாலும், சட்டப்படி உரிமை இல்லை என முடிவு செய்யப்பட்டது.

ஜோகியின் மகன் 2008 ஏப்ரல் 28ஆம் தேதி விமானப்படை மெஸ்ஸில் இரவு உணவின்போது மரணமடைந்தார். இது குறித்து விசாரணை தொடர்கின்ற நிலையில், விமானப்படை தரப்பில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மரணத்தின் காரணம் இன்னும் தெளிவாகாத நிலையில், தாயாக இருந்த ஜோகிக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில், அடுத்த விசாரணை நவம்பர் 20, 2025க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.