அஹமதாபாதை சேர்ந்த பெண் ஒருவர் தெற்கு கோவாவுக்கு அமைதியான விடுமுறைக்காக பயணித்திருந்தார். ஆனால் அந்த பயணம் அவருக்குப் பெரிய தொல்லையாக முடிந்தது. ஆப்-அடிப்படையிலான கேப் ஒன்று முன்பதிவு செய்ததற்காக, உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்களால் அவருக்கு கடுமையான தொந்தரவு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அதாவது தன்னை கேப்பில் ஏற விடாமல் தடுப்பதுடன், போலீசால் மிரட்டப்பட்டதாகவும், தனது சாமான்களுடன் கன மழையில் பல கிலோமீட்டர்கள் நடந்து விமான நிலையம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Wake up Goa. This is not an isolated incident.
Many tourists visiting Goa have shared videos on social media, complaining about being charged extremely high fares for short trips. These unfair practices are leaving visitors with negative experiences and damaging Goa’s reputation… pic.twitter.com/nSur8fRyID
— Anshul Saxena (@AskAnshul) September 19, 2025
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். இதனையடுத்து கொல்வா போலீஸார் விசாரணை நடத்தி, பெட்டால்பட்டிம் பகுதியைச் சேர்ந்த மெனினோ டி’சில்வா, மிலாக்ரஸ் அல்மெய்தா மற்றும் அஞ்சலோ ரொட்ரிக்ஸ் ஆகிய மூன்று பேர் மேலும் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த பெண் சுற்றுலா பயணியால் முன்பதிவு செய்யப்பட்ட ரிசார்ட் கூட உதவவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். “இரவுக்கு ரூ.5,000 முதல் 6,000 வரை செலுத்தியிருந்தாலும், ரிசார்ட் ஊழியர்கள் என்னை காப்பாற்றாமல் தவிர, சமாதானப்படுத்த முயற்சித்தனர்,” எனக் கூறிய அவர், எதிர்கால சுற்றுலாப் பயணிகள் தெற்கு கோவாவில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகள் வரும்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்,” எனவும் எச்சரித்துள்ளார்.
