அரியானா மாநிலம் பஹார் காலனி பகுதியில் தீபான்ஷி சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டில் உள்ள பீரோவின் கதவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பீரோ சிறுமியின் மீது சரிந்து விழுந்துள்ளது. இதனால் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பதறிப்போன தீபான்ஷியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பீரோ விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவமானது அப்பகுதியில் இருப்பவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
