உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான்சி மகாராணி லட்சுமி பாய் மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென பாம்பு ஒன்று உள்ளே நுழைந்தது‌‌. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் பாம்பு பிடிக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதையடுத்து அவர்கள் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இவ்வாறு சிகிச்சை நடைபெறும் இடத்திற்கு பாம்பு அசால்டாக வந்து சென்ற சம்பவம் நோயாளிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் மருத்துவ கல்லூரி நிர்வாகமானது அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதாவது மருத்துவ கல்லூரியை சுற்றி கண்காணிப்பு கேமரா வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.