திமுக கட்சியின் முப்பெரும் விழா நேற்று கரூரில் நடைபெற்றது. இந்த விழாவின் போது முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் கூறியதாவது, ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்காக எதையும் செய்யாத எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக குரல் கொடுக்க தெம்பு இல்லாமல் அடிமை சாசனம் எழுதி கொடுத்தார்.
இப்ப பாஜக தன்னுடன் இருக்கிறது என்று வாய்க்கொழுப்போடு பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பண்பே இல்லாமல் என்னை ஒருமையில் பேசுகிறார். கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் எடப்பாடி பழனிச்சாமியை மக்களே எடை போட்டுக் கொள்வார்கள். அதிமுகவை ரெய்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்.
திராவிடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அவர் அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பதுதான் வெட்கக்கேடு. அதிமுக தொடங்கப்பட்டபோது அண்ணாயிசம் தான் கொள்கை என்றார்கள். ஆனால் இதனை இப்போது அடிமையிசம் என மாற்றி அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி சரணடைந்துவிட்டார்.
முழுசா நனைந்த பிறகு எதற்கு முக்காடு என கேட்பார்கள். அதேபோன்றுதான் டெல்லியில் கார் மாறி மாறி போனப் எடப்பாடி பழனிசாமியை பார்த்து தற்போது கேட்கிறார்கள் காலில் விழுந்த பிறகு முகத்தை மூட இப்ப எதற்கு கர்சீப் என்று. இப்படிப்பட்ட ஒருவரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். மேலும் முதல்வர் இவ்வாறு கூறியதும் கீழே இருந்த தொண்டர்கள் சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
