கர்நாடக மாநிலமான பெங்களூரில் இளம்பெண் ஒருவர் வெப் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி ஜக்கூர் மெயின் ரோட்டில் நண்பர்களுடன் காரில் சென்றார். இந்நிலையில் சாலையோரம் வாகன மோதியதில் ஒரு நாய் படுகாயமடைந்து கிடந்ததால் இளம்பெண் அந்த செல்லப்பிராணியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அலறிய இளம் பெண்ணின் சத்தம் கேட்டு வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து மீண்டும் வந்த வாலிபர் பெண்ணுக்கு 2-வது முறையாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் இளம்பெண் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபரை விரட்டி சென்றுள்ளனர். அப்போது வேகமாகச் சென்ற வாலிபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததால் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் காவல்துறையினர் வருவதற்குள் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்ததாக எலகங்கா அருகில் வசித்து வந்த மஞ்சுநாத் என்பவரை கைது செய்தனர். அதாவது கடந்த 7ம் தேதி மது குடித்துவிட்டு வரும்போது இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு இளம் பெண்ணுக்கு வாலிபர் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.