மும்பையில் உள்ள சத்தாரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கோரேகாவ் பகுதியில் வசித்து வரும் காஜல் விகாஸ் ககுர்தியா என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் மூச்சு திணறல் மற்றும் பிரசவ வலியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் கர்ப்பிணியை பரிசோதனை செய்தபோது அவர் தன் வயிற்றில் 4 குழந்தைகளை சுமந்து வந்திருப்பது பெரிய வந்தது. இதனால் தாயின் உடல் நிலையை கருதி மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பிரசவம் செய்ய முடிவு செய்தனர். இந்த அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையின் டீன் மருத்துவர் விநாயக் காலே வழிகாட்டினார்.
பின் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்த அறுவை சிகிச்சையின் மூலம் கர்ப்பிணி பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் காஜலுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-வது பிரசவத்தில் அவருக்கு 4 குழந்தை பிறந்து மொத்தம் 7 பிள்ளைகளை காஜல் பெற்றெடுத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது அப்பகுதியில் இருப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
