இந்திய ரயில்வேயில் பயணிகள் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் (AC Coach) புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு பெண் புகைபிடித்த சம்பவத்தை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பயணி ஒருவர் பதிவு செய்து, அந்தப் பெண்ணை பெட்டியில் புகைபிடிக்க வேண்டாம், வெளியே செல்லுமாறு கேட்டுள்ளார்.
ஆனால், இதற்கு பதிலளித்த பெண் ஆத்திரமடைந்து, “நான் உங்கள் பணத்தில் புகைபிடிக்கவில்லை” என்று கோபமாக வாக்குவாதம் செய்தார். பின்னர், டிக்கெட் சோதனையாளர் (TTE) வந்து விசாரித்தபோது, அந்தப் பெண் பதற்றமடைந்து அழ ஆரம்பித்தார், இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
सिगरेट पीने की तलब, बेईज्जत करवा देती हैं. वायरल वीडियो में चलती ट्रेन में इस तरह धूम्रपान करेगी तो सामने वाला आपकी करतूतों को दिखाएगा?@RailMinIndia pic.twitter.com/mXHxy0715s
— Tushar Rai (@tusharcrai) September 15, 2025
விஷயம் பெரிதானதை அடுத்து, டிக்கெட் சோதனையாளர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை அமைதிப்படுத்தினார். அவர், புகைபிடித்ததற்காக மூன்று விருப்பங்களை முன்வைத்தார்: வழக்கமான அபராதம் செலுத்துவது, அபராதமின்றி விடுவிப்பது, அல்லது விவகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைப்பது.
Is it legal to smoke on a train? @RailwaySeva
Mahila hai to sb legal hai asa?
she- “mai tere paso ka nhi pee rhi na”
In the end, she dropped her last Ace card- “crying”. pic.twitter.com/BNFJPYwd0U
— Mayank Burmee (@BurmeeM) September 15, 2025
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பயனர்கள் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். ஒருவர், “பொது இடத்தில் புகைபிடிப்பது மற்றவர்களின் உடல்நலத்தையும், பயண அனுபவத்தையும் பாதிக்கிறது. இதற்கு கடுமையான தண்டனை தேவை, இது பெண்ணுரிமை பிரச்சினை அல்ல, பொது ஒழுக்கம் பற்றியது,” என்று கூறினார்.
மற்றொரு பயனர், “குளிர்சாதன பெட்டியில் புகைபிடிப்பது ஆபத்தானது, இதற்கு உரிமை உணர்வு எதற்கு?” என்று விமர்சித்தார். இந்த சம்பவம், பொது இடங்களில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
