இணையத்தில் எப்போதும் போல், முக்கியமில்லாத விஷயங்களையே பெரிதுபடுத்தி விமர்சிப்பதில் நெட்டிசன்கள் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். இப்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், திருமண புகைப்படக் காட்சியின் போது ஒரு இந்தியத் தம்பதியர் லிப்-லாக் கொடுக்கின்றனர்.
இவர்களின் இந்த நெருக்கமான ரொமான்ஸ் நிகழ்வை புகைப்படக் குழுவினர் கேமராவில் பதிவு செய்கின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பெரும் அளவில் வைரலாகி, நெட்டிசன்களின் கருத்துகளை பெற்று வருகின்றன.
I don’t know why people are going mad over this? It is their own life, own choices, own way of public simply of love.. For all they want, they can allow vlogging of their suhag raat also.. Why should others do moral policing? pic.twitter.com/vxyQhaKDU9
— Keh Ke Peheno (@coolfunnytshirt) September 14, 2025
இந்த வீடியோ முதலில் சமூக வலைதளங்களில் ரகசியமாகப் பரவி, பின்னர் பெரும் வைரலானது. இந்த ஜோடி, தங்களது திருமண நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கணவனும் மனைவியும் ஒரு ரொமான்டிக் முத்தத்தில் ஈடுபடுவதை காட்சிப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற புகைப்படக் காட்சிகள் தற்போதைய திருமணங்களில் ஒரு நவீன போக்காகவே மாறிவிட்டது.
இருப்பினும், பலர் இதனை கடுமையாக விமர்சித்து, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும், மேற்கத்திய தாக்கத்தின் விளைவாகவே இத்தகைய செயல் தோன்றியதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சில நெட்டிசன்கள் ஜோடியை ஆதரித்து, “இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, விருப்பம், காதல் காட்சிப்படுத்தும் விதம்” எனக் கூறி சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்கள்.
வீடியோ @coolfunnytshirt என்ற X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் கலாசாரக் கருத்துவாதத்திற்கும், தனியுரிமை விவாதத்திற்கும் காரணமாக மாறியுள்ளது.
