2023 ஆம் ஆண்டு புனேவை ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் போலி பட்டப்படிப்பு மூலம் சிவில் சர்வீஸ் வேலை பெற்றதாக பரபரப்பான விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். இந்நிலையில், அவரது தாயார் மனோரமா கேட்கரும் ஒரு கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். மும்பையில் ஒரு டிரக் ஓட்டுநர் கடத்தப்பட்டு, புனேவில் உள்ள பூஜா கேட்கரின் வீட்டில் இருந்து காவல்துறையால் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பூஜாவின் குடும்பத்தை மேலும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
நவி மும்பையில் ஒரு மிக்ஸர் டிரக் மற்றும் ஒரு கார் மோதிய விபத்து நடந்தது. இதையடுத்து, காரில் இருந்தவர்கள் டிரக் ஓட்டுநர் பிரல்ஹாத் குமாரை கட்டாயப்படுத்தி தங்கள் காரில் அழைத்துச் சென்றனர். காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, அந்த காரை புனேவில் உள்ள பூஜா கேட்கரின் வீட்டில் கண்டுபிடித்து, கடத்தப்பட்ட ஓட்டுநரை மீட்டது. ஆனால், இந்த நடவடிக்கையின்போது பூஜாவின் தாயார் மனோரமா காவல்துறையுடன் மோசமாக நடந்து கொண்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
वादग्रस्त आणि निलंबित प्रशिक्षणार्थी आयएएस अधिकारी पूजा खेडकर हिच्या आईचा आणखी एक प्रताप पुढे आला असून पोलिसांनी गुन्हा दाखल केला आहे. दिनांक 13 सप्टेंबर 2025 रोजी सायंकाळी सात वाजताच्या सुमारास मुलुंड ते ऐरोली रोडवरील ऐरोली हद्दीतील सिग्नलवर प्रल्हाद कुमार वय 22 राहणार तुर्भे… pic.twitter.com/61ZzrvHAl0
— Vijay Kumbhar (@VijayKumbhar62) September 14, 2025
இந்த சம்பவத்தால் பூஜா கேட்கரின் குடும்பத்தின் மீது மேலும் வழக்குகள் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனோரமா கேட்கருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது, மேலும் இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
