காட்டின் இயற்கை நடமாட்டங்கள் எப்போதும் மனிதர்களுக்கு ஆச்சரியங்களைக் கொடுக்கின்றன. சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள வீடியோ ஒன்றும், அத்தகைய அபூர்வமான நிகழ்வை பதிவு செய்துள்ளது. இதில், உலகின் மிகவும் விஷமுள்ள பாம்பு என அழைக்கப்படும் கருப்பு மாம்பா, ஒரு கழுகுடன் கடும் போராட்டத்தில் ஈடுபடுகிறது. இதற்கு இடையில் திடீரென ஒரு பெண் சிங்கம் நுழைந்து  திகைக்க வைத்துள்ளது.

அந்த வீடியோவின் தொடக்கத்தில், கருப்பு பாம்பு  தனது கூர்மையான இயக்கத்துடன் ஒரு கழுகை பிடித்து அதன் மேல் இறுக்கமாக சுற்றிக் கொள்கிறது. கழுகு பெரிதாக அசையாமலேயே இருந்தது, இதனால் அது இரையாகிவிடும் நிலை தென்பட்டது. இதில் கழுகே முதலில் பாம்பை வேட்டையாட வந்திருக்கலாம், ஆனால் அது ஒரு சாதாரண பாம்பு அல்ல என்பது பின்னர் புரிந்திருக்கலாம். இது, உலகின் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான “Black Mamba” என அழைக்கப்படும் பாம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், ஒரு பெண் சிங்கம் அந்த இடத்தில் வந்தடைந்து, பாம்பை எதிர்கொள்ள முயல்கிறது. முதலில் அதன் முன்னிலையில் பாம்பை பயமுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டாலும், பாம்பு அசையாத வலிமையோடு இருந்தது. அதையடுத்து சிங்கம் தனது காலால் பாம்பை இழுத்துவிட முயன்றது. இதனால் பாம்பும் தன் தலையை தூக்கி எதிர்வினை காட்டியது. ஒரு கணம் அது சிங்கத்தை கடிக்கலாம் போல தெரிந்தது, ஆனால் அத்தகைய தாக்குதல் நிகழவில்லை.

இந்த வீடியோ X தளத்தில் @AmazingSights என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டுள்ளது. வெறும் 16 வினாடிகள் கொண்டது என்றாலும், இதில் இடம்பெறும் காட்சி – வேட்டைக்கார கழுகு, விஷமுள்ள பாம்பு, வலிமையான சிங்கம் – அனைத்தும் ஒரே நேரத்தில் இடம்பெறுவது,உள்ளாக்கியுள்ளது.

மேலும் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் நூற்றுக்கணக்கான லைக்குகள் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளன. பலர் இந்த வீடியோவின் கீழ் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்: