உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் உள்ளூர் மக்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, அதன் வீடியோ புதன்கிழமை வெளியாகி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
ऋषिकेश : रिहायशी इलाके में घुसा हाथी, लोगों ने गाड़ी के पीछे छिपकर बचाई जान
◆ वीडियो हुआ SM पर वायरल #Rishikesh #Elephant #LatestNews #NewsUpdate #anbnews #anbnational pic.twitter.com/Z8yDhbptRs— ANB NEWS (@AnbNewstv) September 10, 2025
வீடியோவில், ஒரு குறுகலான தெருவில் மக்கள் கூட்டமாக ஓடுவதும், அவர்களை காட்டு யானை துரத்துவதும் தெரிகிறது. உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின்னால் ஒளிந்து கொள்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, யானை அவர்களுக்கு தீங்கு செய்யாமல் சென்றுவிட்டது. மக்கள் தொகை அதிகரிப்பதால், காடுகள் அழிக்கப்படுகின்றன, இதனால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
