பீகார் மாநிலம் சூப்போல் மாவட்டத்தில், காட்டில் அப்பாவி பறவைகளை வேட்டையாடிய ஒருவரை, உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் பிடித்து, அவருக்கு கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெயர் வெளியாகாத அந்த பத்திரிகையாளர், வேட்டைக்காரர் ஒரு வெள்ளைப் பறவையை கட்டி மறைத்து வைத்திருப்பதை பார்த்து, அதை காட்டச் சொன்னார். வேட்டைக்காரர் தயங்கியபடி காட்டியபோது, பறவை காயம்பட்டு ரத்தம் வழிவதை கண்டு ஆத்திரமடைந்த பத்திரிகையாளர், அவரை கடுமையாக அறைந்து, இந்த கொடூர செயலை கண்டித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by StreetdogsofBombay (@streetdogsofbombay)

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில்  பகிரப்பட்டு, பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. வீடியோவின் தலைப்பில், “உடனடி கர்மா கேமராவில் பதிவாகியது! இயற்கைக்கு அதன் பாதுகாவலர்கள் உள்ளனர், கர்மா நினைப்பதை விட வேகமாக செயல்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பத்திரிகையாளரின் உடனடி நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். “இப்படிப்பட்ட நேர்மையான, தைரியமான பத்திரிகையாளர்கள் தேவை” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், “இந்த முறை பிடிபட்டார், ஆனால் வேட்டையாடுவது தொடர்கிறது” என்று கவலை தெரிவித்தார். இந்த வைரல் வீடியோ, பறவைகளுக்கு எதிரான கொடுமையை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.