சமூக வலைதளங்களில் ஒரு குடும்பத்தின் அசத்தல் வீடியோ வைரலாகி வருகிறது, இது ‘தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்’ என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த வீடியோவில், ஒரு குடும்பம் எந்தவித நவீன இயந்திரமும் இல்லாமல், தங்களின் புத்திசாலித்தனத்தால் கரும்பு ஜூஸ் எடுக்கும் அபாரமான திறமையை காட்டியுள்ளது.
இந்த வித்தியாசமான முறையை பார்த்த இணையவாசிகள் ஆச்சரியத்தில் மூழ்கி, “ இந்தியர்களை மட்டுமல்ல, வெளிநாட்டவர்களையும் விஞ்சிவிட்டார்கள்” என புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் nguyenlethao1982 என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்று, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
அந்த வீடியோவில், அந்த குடும்பம் மரத்தில் இருந்து உறுதியான கட்டைகளை கட்டி, ஒரு எளிய ஜூஸர் கருவியை உருவாக்கியுள்ளது. இதில், ஒரு பெண் தனது குழந்தையுடன் கரும்பை அந்த கட்டமைப்பில் பொருத்துகிறார், மற்றொரு குடும்ப உறுப்பினர் கட்டையில் அமர்ந்து மேலும் கீழும் ஆட்ட, கரும்பின் மீது அழுத்தம் படுவதால் ஜூஸ் பிழிந்து வெளியேறுகிறது.
இயந்திரங்கள் இல்லாமல், வெறும் மரக் கட்டைகளை வைத்து இப்படி ஒரு முறையை கண்டுபிடித்தது, கடினமாக இருந்தாலும், அவர்களின் புத்திசாலித்தனத்தை பறைசாற்றுகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள், “எந்த சூழலிலும் மனிதன் தனது தேவைகளுக்கு தீர்வு காண்பான்” என கருத்து தெரிவித்து, இந்த கண்டுபிடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
