அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 33 வயது மாடல் மற்றும் ஓன்லிஃபேன்ஸ் நட்சத்திரமான ஏலா (Aella), தனக்கு ஏற்ற கணவரை கண்டுபிடித்து தருபவருக்கு 1 லட்சம் டாலர்கள் (சுமார் 88 லட்சம் ரூபாய்) பரிசாக தருவதாக அறிவித்து இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது மட்டுமல்ல, தனக்கு கர்ப்பமாக உதவி செய்யும் ஒருவரை அறிமுகப்படுத்தினால், 3 லட்சம் டாலர்கள் (சுமார் 2.5 கோடி ரூபாய்) வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த அசாதாரண ஆஃபர், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு பெண்ணும் தன்னை முழு மனதுடன் நேசிக்கும், பாதுகாக்கும் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்’ கணவனை கனவு காண்கிறாள், ஆனால் ஏலாவின் இந்த தேடல் வித்தியாசமானது மட்டுமல்ல, பண ஆஃபருடன் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

“ஏலா தன்னைப் பற்றி, “நான் கொஞ்சம் விசித்திரமானவள்” என்கிறார். “டேட்டிங் செய்யவோ, என்னை திருமணம் செய்யவோ ஆண்கள் தயாராக இருக்கிறார்கள், ஆனால் நான் விரும்பும் கணவருக்கான குணங்கள் கொண்டவர்கள் மிகவும் குறைவு,” என்கிறார். அவருக்கு வேண்டிய கணவர், பாலிகமி (பலதார மணம்) ஆதரவாளராகவும், உணர்ச்சி மற்றும் பாலியல் ஆர்வம் நிரம்பியவராகவும், தனது செல்வத்திற்கு ஈடான பொருளாதார வசதி உள்ளவராகவும், குழந்தைகள் விரும்புபவராகவும், முழுமையாக தன்னை ஏற்றுக்கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

இப்படி ஒரு ஆணை கண்டுபிடிப்பது கடினம் என்பதால், அவர் முன்கூட்டியே தனது அதிர்ஷ்டத்தை முயற்சிக்கிறார். மேலும், தன்னை கர்ப்பமாக்கி, குழந்தையை வளர்க்க 1 கோடி டாலர் தருபவரை அறிமுகப்படுத்தினால், 3 லட்சம் டாலர் பரிசு தருவதாகவும் கூறியுள்ளார். தற்போது அவருக்கு ஒரு காதலர் இருந்தாலும், 4 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கும் அவரை அறிமுகப்படுத்தியது ரசிகர்களே என்றாலும், இப்போது தனக்கு ஒரு கணவர் தேவை என தேடி வருகிறார்.