உணவகங்களுக்கு சென்று உணவு ஆர்டர் செய்யும் போது, அதன் அளவும் தரமும் நியாயமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் அனைவரும் உணவு உண்ணுகிறோம். ஆனால், பல நேரங்களில் உணவகங்கள் நம்மிடம் செய்யப்படும் மோசடிகள் நம்மால் உணர முடியாமல் போய்விடுகின்றன. சமீபத்தில் இதை மையமாகக் கொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், உணவகங்கள் மிகப்பெரிய பாத்திரங்களில் உணவை கொடுத்து உணவின் அளவு அதிகமாக இருப்பது போல காட்டி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை ஒரு பெண் நேரடியாகக் காட்டுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Radhika Maroo (@radhikamaroo)

வீடியோவில், `radhikamaroo` என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒரு உணவகத்தில் பருப்பு குழம்பு ஆர்டர் செய்கிறார். அப்போது, பரிமாறியவர், பருப்பு உணவை ஒரு பெரிய பக்கெட்டில் கொண்டு வந்து பரிமாறுகிறார். ஆனால், அதனை அந்த பெண் ஸ்பூனுடன் அளந்துப் பார்த்த போது, அந்த பெரிய பக்கெட்டில் உண்மையில் பருப்பு இருந்தது மிகக்குறைவாகவே என்பதை சுலபமாகக் காண முடிந்தது. உணவு பாத்திரத்தின் அளவு பெரியதாக இருப்பதால் உணவின் அளவும் அதிகமாக இருக்கிறது என்று தோன்றினாலும், உண்மையில் அதில் இருக்கும் உணவு மிக குறைவானது.

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டதிலிருந்து இதுவரை 4.8 கோடி முறை பார்வையாக்கப்பட்டு, 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்றுள்ளது. அப்படித்தான் நாங்களும் ஏமாந்தோம் என பலரும் கருத்து தெரிவித்து சாடியுள்ளனர். “உணவக உரிமையாளர்கள் Packing Universityல டிகிரி எடுத்தவர்களா?” என சிலர் நகைச்சுவையாக விமர்சனம் செய்துள்ளனர். ஒரே நேரத்தில், உண்மை சம்பவத்தை பயமின்றி வெளிப்படுத்திய அந்த பெண்ணுக்கு பாராட்டும் குவிந்துள்ளது.