மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் கேட்ட “நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார்… உங்களையும் அழைத்தால் சேர்ந்துவீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய் அவர்களே அழைத்தாலும் அரசியலுக்கு வருவேன் என்ற எண்ணமே இல்லை… எனக்கு அரசியலில் நாட்டமில்லை” என்று திட்டவட்டமாக கூறினார்.

அண்மையில் நடிகை அம்பிகா, “நான் அரசியலுக்கு வருவேன்” என வெளிப்படையாக தெரிவித்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் வழங்கிய இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வழங்கிய பதிலுக்கும், அவரது நேர்மைக்கும் பாராட்டு கிடைத்து வருகிறது.