தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது 49வது திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் இந்த படம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தின் காலகட்டத்தில் அதனை ஒட்டிய வேறு கதையின் படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.