தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏதுவாக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்து செல்ல வேண்டிய மாணவர்களுக்கு, அவர்கள் தற்போது கல்வி பயின்று வரும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
இத்தகைய தேர்வு மையங்களைப் பெற விரும்பும் பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும், இந்த மாணவர்கள் விவரங்களுடன் கூடிய கருத்துருவை வரும் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாநிலம் முழுவதும் உள்ள பல லட்சம் பள்ளி மாணவர்களுக்கு பயண சிரமம் மற்றும் பாதுகாப்பு ரீதியாக நன்மை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
