திமுக அமைச்சரும் மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு எதிராக சென்னை தனிச்சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2007 முதல் 2009 வரை பதவியில் இருந்த காலகட்டத்தில், துரைமுருகன் தனது வருமானத்தைவிட அதிகமாக ரூ.1.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது , அவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த வழக்கில் அவர் தொடர்ந்து ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து, வரும் 15ம் தேதிக்குள் அதை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
