ஸ்காட் ஜென்னிங்ஸ் நடத்திய ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “சீனா எங்களை வரிகளால் கொல்கிறது, இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது, பிரேசிலும் இதே நிலை தான். வரிகளைப் பற்றிய விஷயத்தில் உலகில் யாருக்கும் தெரியாத அளவுக்கு எனக்குத் தெரியும். இந்தியா உலகத்தில் அதிக வரி விதிக்கும் நாடு. ஆனால் தற்போது, ‘அமெரிக்கா இனி மீது வரி விதிக்காது’ என அவர்கள் எனக்கு உறுதி அளித்துள்ளனர்” எனக் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய டிரம்ப், “இந்தியாவிற்கு எதிராக 50 சதவீத வரி விதிக்கப்பட்டதால்தான் அவர்கள் இப்போது எங்களிடம் ஒப்புதல் கொடுத்துள்ளனர். அந்த வரி விதிப்பு இல்லையென்றால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள். அதனால் வரி விதிப்பு என்பது தேவையான ஒன்றாகும்.

இது அமெரிக்காவிற்கு பேரம்பேசு சக்தியை வழங்குகிறது” என வரி கொள்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். டிரம்பின் இந்த கூற்று தற்போது சர்வதேச அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.