மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தாயின் பழைய சேலையை தோலி ஸ்டைலில் அணிந்து, சமூக வலைதளங்களில் புதிய ஃபேஷன் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான பூஷன் மல்கானி (@insta_bhoo) பகிர்ந்த இந்த வீடியோ, 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
சேலையை பாரம்பரிய தோலி முறையில் அணிந்து, பொருத்தமான குர்தாவுடன் தனது தோற்றத்தை முழுமையாக்கிய பூஷனின் புதுமையான முயற்சி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பெண்களும் அவரது கிரியேட்டிவிட்டியை பாராட்டி, கமெண்ட்டுகளை அள்ளி வீசியுள்ளனர்.
View this post on Instagram
“ஸ்டைல் என்பது நீங்கள் உருவாக்குவது, ஆனால் சில நேரங்களில் அது உங்களுக்கு வாரிசாக கிடைக்கிறது,” என பூஷன் இந்த வீடியோவின் கேப்ஷனில் எழுதியுள்ளார். தனது தாயின் கதைகளை சுமந்த இந்த சேலை, இப்போது தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 29 அன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, 4.54 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று, கமெண்ட்டுகளால் நிரம்பி வழிகிறது. “என்னோட கணவருக்கு இதை காட்டணும்,” என்று ஒருவர் கிண்டலாக எழுத, “சூப்பர் ஸ்டைலிஷ்” என்று மற்றொருவர் புகழ்ந்துள்ளார். “கலக்கிட்டீங்க” என்று இன்னொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். இந்த வைரல் வீடியோ, இந்திய பாரம்பரிய உடையை புதிய கோணத்தில் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.
