ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த தீபேஷ் குமாரி, யுபிஎஸ்சி தேர்வில் 93-வது இடம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானவர். அவரது தந்தை 25 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் பக்கோடா விற்று குடும்பத்தைப் பராமரித்தார். ஏழ்மையான சூழலிலும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தீபேஷ் குமாரி, பி.டெக், எம்.டெக் முடித்து தனியார் வேலையில் சேர்ந்தார். ஆனால், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற 2019-ல் UPSC தேர்வுக்கு தயாராக தொடங்கினார்.

2020-ல் முதல் முயற்சியில் தோல்வியடைந்தாலும், 2021-ல் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் உதவி செயலாளராகப் பணிபுரிகிறார். தந்தையின் உழைப்பும் தியாகமும் தனக்கு உற்சாகம் அளித்ததாகவும், சோர்வு ஏற்படும்போது அவரது போராட்டங்கள் தன்னை மீண்டும் உத்வேகப்படுத்தியதாகவும் ஒரு பேட்டியில் தீபேஷ் குமாரி கூறினார்.