உத்தர் பிரதேசத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரிஷிகேஷ் காணாமல் போன நிலையில், ஆற்றில் அவரது உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ரிஷிகேஷ் காதலித்த பெண்ணின் சகோதரர் பவன் மல்லா, தனது நண்பர்களான டோலி, பாபி, சத்யம் ஆகியோருடன் சேர்ந்து அவரைக் கொலை செய்து ஆற்றில் வீசியது தெரியவந்தது.
இந்தக் கொலை வழக்கில் மொத்தம் 14 பேர் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது. இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
