டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று கடும் பரபரப்புடன் நடைபெற்றது. மேற்கு டெல்லி லயன்ஸ் அணியும், தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் மோதிய இதில், டாஸ் வென்ற மேற்கு டெல்லி அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தெற்கு டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பில் 201 ரன்கள் குவித்தது. தேஜஸ்வி தாஹியா அருமையான ஆட்டத்துடன் 60 ரன்கள் அடித்தார்.
Sher ko chhedoge… toh jawab six se milega. 🦁🔥#WestDelhiLions #DelhiPremierLeagueT20 #DPL #DPLT20 #Cricket #Delhi #DDCA #cricket #westdelhi #nitishrana #digveshrathi pic.twitter.com/xVB3wMi4kX
— West Delhi Lions (@WestdelhiLions) August 30, 2025
வெற்றி இலக்கான 202 ரன்களை நோக்கி களமிறங்கிய மேற்கு டெல்லி அணிக்கு கேப்டன் நிதிஷ் ராணா அடித்த அதிரடி சதம் மிகப்பெரிய ஆதரவாக இருந்தது. அவர் 55 பந்துகளில் 134 ரன்கள் விளாசினார். 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில், மேற்கு டெல்லி லயன்ஸ் அபார வெற்றி பெற்று குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது. இதற்காக நிதிஷ் ராணா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
போட்டியின் 8வது ஓவரில் திக்வேஷ் ரதிக்கு எதிராக நிதிஷ் ராணா காட்டிய அதிரடி நெட்டில் வைரலாகி வருகிறது. ஒரு பந்தை தவிர்த்த ராணா, அதன்பிறகு எதிர்பாராத வகையில் ரிவர்ஸ் ஸ்வீப் சிக்சர் அடித்து, தன்னுடைய பேட்டில் புத்தகத்தில் எழுதுவது போல நடித்து, அதை முத்தமிட்டார். இது கடந்த IPL தொடரில் திக்வேஷ் செய்த கொண்டாட்டத்துக்கான பதிலடி என்பதால், திக்வேஷ் கடுப்படைந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிலவ, நடுவர்கள் மற்றும் வீரர்கள் சமாதானப்படுத்தினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதுடன், ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.
