இந்திய அணியின் முன்னாள் வீரரும், சமீபத்தில் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியவருமான ராகுல் டிராவிட், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அணியின் ஆட்டத் திறன் எதிர்பார்ப்புக்கு இணையாக இல்லாததால், இந்தாண்டு ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் மட்டுமே முடித்தது. இதனால் அணியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) ராகுல் டிராவிட் தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிராவிட் விலகியதன் பின்னர், ராஜஸ்தான் அணிக்கு விரைவில் புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு, அடுத்த சீசனில் அணியின் ஆட்டத் திட்டம் மற்றும் செயல்பாட்டில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.