மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை அதிரவைத்துள்ளது. சஞ்சீவானி என்ற பெண்மணி, திருமணமான பிறகும் லக்கன் என்ற வாலிபருடன் பழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவ நாளன்று, தனது வீட்டிற்கே லக்கனை அழைத்துச் சென்று மூடிய அறையில் இருவரும் தவறான உறவில் இருந்ததை பார்த்த சஞ்சீவானியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவானியின் கணவரும், அவரது தந்தையும், இருவரும் திட்டமிட்டு சஞ்சீவானியையும், லக்கனையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர், இரு உடல்களையும் அருகிலுள்ள கிணற்றில் வீசி தடயங்களை அழிக்க முயன்றுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் அப்பெண்ணின் தந்தையையும் கணவரையும் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.