மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் பெட்ரோல் மோசடி தொடர்பான பரபரப்பு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் தனது இருசக்கர வாகனத்திற்காக 16 லிட்டர் பெட்ரோல் கேட்டு பணம் செலுத்தினார். ஆனால் வாகனத்தின் டேங்க் அளவு மற்றும் நிலைமைப்படி டேங்க் நிறைந்திருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், ஊற்றிய பெட்ரோலை வெளியே எடுத்து அளந்து பார்க்க ஊழியரிடம் வலியுறுத்தினார்.
அதன்படி, வாகனத்திலிருந்த பெட்ரோலை வெளியே எடுத்து அளந்தபோது, வெறும் 13 லிட்டர்தான் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வாடிக்கையாளர் கடும் அதிருப்தியுடன் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவிக் கொண்டுள்ளது.
View this post on Instagram
“>
அந்த வீடியோவில் வாடிக்கையாளர் கோபத்துடன் ஊழியர்களிடம் பதில் கேட்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெட்ரோல் பம்புகளில் நடைபெறும் மோசடிகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளதோடு, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
