ஹரியானாவின் குருகிராமில் மாலை நேரத்தில் , மது போதையில் சாலையின் நடுவில் படுத்திருந்த ஒருவர் மீது கார் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அருகிலிருந்தவர்கள் எடுத்த வீடியோவின் மூலம் இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது.மது மயக்கத்தில் இருந்ததாக கூறப்படும் அந்த நபர், சாலையின் நடுவே கண்கள் திறந்தும் அசையாமல் படுத்திருந்தார்.
அங்குப்போனவர்கள் பலரும் அவரை எழுப்ப முயற்சித்தும், அவர் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஒரு கார் அந்த வழியாக மெல்ல சென்றபோது, எதிர்பாராத விதமாக அந்த நபர் மீது ஏறியது. அதை பார்த்த மக்கள் பதறிய நிலையில் கூச்சலிட்டனர்.
ஆனால் அசாதாரணமாக அந்த நபர் கார் சென்றவுடன் உடனே எழுந்து உட்கார்ந்தார். இது அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியடையச் செய்தது. காரின் வேகம் அதிகமாக இல்லாததாலே பெரிய விபத்து தவிர்ந்தது எனக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து அந்த நபரை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தினர். அவரை பரிசோதித்ததில் முழுமையாக மது மயக்கத்தில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது வரை எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை. இது போன்ற அபாயகரமான நிலைகளில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
