சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில், ஒரு பெண் தனது வீட்டில் வளர்த்து வரும் பல நாய்களுக்கு ஒரே நேரத்தில் உணவு அளிப்பது காணப்படுகிறது.
ஆச்சரியமான விஷயம் என்னவெனில், உணவு முன்னால் வைக்கப்பட்டிருந்தாலும், பெண் தனிப்பட்ட பாத்திரங்களில் உணவு எடுத்து கொடுக்கும் வரை எந்த நாயும் அதைத் தொடவில்லை. பெண் கட்டுப்பாட்டில் இருக்கின்ற அந்த ஒழுக்கம் கண்டு, பார்த்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் தெருநாய்கள் குறித்து பெரும் சர்ச்சை நிலவியது. அடிக்கடி நிகழும் கடிக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் அவற்றை செல்லப்பிராணி பாதுகாப்பு மையங்களில் வைக்க உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் காந்தி விளக்கு ஊர்வலம் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தற்போது வெளிவந்த இந்த நாய்கள் ஒழுக்கம் பற்றிய வீடியோ, பலரையும் கவர்ந்துள்ளது.
हम इंसानों में भी इतना सब्र नहीं है!😍
pic.twitter.com/prXIfDRjIl— Dr. B L Bairwa MS, FACS (@Lap_surgeon) August 26, 2025
“>
@Lap_surgeon என்ற ஐடியிலிருந்து “ மனிதர்களுக்கே இத்தனை பொறுமை இல்லை” என்ற வர்ணனையுடன் வெளியிடப்பட்ட இந்த 1 நிமிடம் 39 விநாடிகள் கொண்ட வீடியோவை, இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், “சிறிய நாய்களுக்கே இவ்வளவு பொறுமை இருக்கிறது.. ஆனால் உணவு வண்டி கவிழ்ந்தால் மனிதர்கள் அதை கொள்ளையடிக்க ஓடிவிடுகிறார்கள்” எனவும், “இந்த குட்டி நாய்களின் ஒழுக்கம் உண்மையிலேயே அற்புதம்” எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
