சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ்டன் ஃபிஷர் என்ற பெண், இந்தியாவில் குடியேறிய பிறகு தன் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை பகிர்ந்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் அவர், “இந்தியாவுக்கு வந்த பிறகு மூன்று விஷயங்களை நான் முற்றிலும் விட்டுவிட்டேன்” என தெரிவித்துள்ளார். அதில், முக்கியமாக மாமிசம் சாப்பிடுவதையும், டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவதையும் நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
கிரிஸ்டன் தனது அனுபவத்தை விளக்கும்போது, “நான் சைவமாக மாறிவிட்டேன். இது மலிவானது, சுத்தமானது, எளிமையானது மற்றும் ஆரோக்கியமானது. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என தெரிவித்துள்ளார். மேலும், “அமெரிக்காவில் பொதுவாக பயன்படுத்தப்படும் டாய்லெட் பேப்பரை விட்டுவிட்டேன்.
இந்தியாவில் கிடைக்கும் ஜெட் ஸ்ப்ரே மிகவும் சுலபமாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பதால், இனி எப்போதும் டாய்லெட் பேப்பருக்குத் திரும்ப மாட்டேன்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
View this post on Instagram
“>
அத்துடன், இந்தியா வந்த பிறகு தன்னிடம் இருந்த பாதுகாப்பற்ற உணர்வையும் முழுமையாக விட்டுவிட்டதாகவும் கிரிஸ்டன் கூறியுள்ளார். “அமெரிக்க கலாசாரத்தில் இருந்த பல சிக்கல்களால் நான் எப்போதும் அச்சத்திலிருந்தேன். ஆனால் இப்போது பள்ளியில் உள்ள என் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
இந்தியா வந்த பிறகு, நான் உண்மையில் இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறேன் என்று உணர்கிறேன். இதனால் என் குடும்பமும் சிறந்த நிலைக்கு வந்துள்ளது” என தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், “சைவம் என்பது மிகவும் கருணையுடனான தீர்மானம்”, “இந்தியாவில் கிடைக்கும் பசுமையான உணவு தான் சிறந்தது” என பாராட்டி வருகின்றனர்.
