இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, ரயில் பயணத்தின் போது விற்கப்படும் பொருட்களின் உண்மைத்தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் ரயிலில் ஹெட்போன்கள், பவர் பேங்க் போன்ற பொருட்களை விற்க முயற்சிக்கிறார். ஒரு பயணி அவரிடம் இருந்து ஒரு பவர் பேங்கை வாங்கி, அது ஒரிஜினல் தானா என்று கேட்கிறார். அதற்கு விற்பனையாளர், “ஒரிஜினல் தான், வாரண்டி, கேரண்டி எல்லாம் இருக்கிறது” என்று உறுதியாகக் கூறுகிறார்.
ஆனால், பயணி அந்த பவர் பேங்கை திறந்து பார்க்கும்போது, உள்ளே எதுவும் இல்லை. எடைக்காக Clay வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணி, விற்பனையாளரிடம் கேள்வி கேட்கிறார். ஆனால், விற்பனையாளர் பவர் பேங்கை திரும்பப் பெற முயற்சிக்கிறார். இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில் பயணத்தின் போது இதுபோன்ற பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
