இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், முழங்கை அளவு கொண்ட மிகப்பெரிய வாழைப்பழம் காட்டப்பட்டுள்ளது. இது “அனகோண்டா வாழைப்பழம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வாழைப்பழம் இந்தோனேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கிடைக்கிறது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் என்று கூறப்படுகிறது. வெளியான காணொளியில், இந்த அசாதாரண பழத்தின் அளவு நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அனகோண்டா வாழைப்பழம் வளரும் வாழை மரம் 42 அடி உயரம் வரை வளரக்கூடியது என்று கூறப்படுகிறது. அதன் இலைகள் 30 அடி நீளம் வரை இருக்கும். மேலும், இந்த மரத்தின் ஒரு வாழைத்தாரின் எடை சுமார் 80 கிலோ வரை இருக்கும் என்றும் தெரிகிறது. இந்த காணொளி தற்போது வைரலாகி நெட்டிசன்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
https://www.instagram.com/reel/DNA6fjuRSJN/?igsh=cmZ4M3NqbGl2dTR6
