சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, சமூகத்தின் கசப்பான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு பைக் ஓட்டுனர் டெம்போவில் அமர்ந்திருந்த மூன்று குழந்தைகளுக்காக சாக்லேட் கொடுத்தார்.
அதில், இரண்டு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டனர். ஆனால், மூன்றாவது சிறுமி சாக்லேட் எடுக்க முன், பயந்த குரலில் “இது நோயாளிகளுக்கான சாக்லேட் அல்லவா? நீங்கள் குழந்தையைப் பிடிக்க வருபவர் அல்லவா?” என்று கேட்டார். அந்த தருணம் பைக் ஓட்டுனரை திடுக்கிட்டதோடு, வீடியோவை பார்த்த அனைவரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
அந்த மனிதர், “இல்லை பாப்பா, நான் நல்லவன் தான்… உனக்கு பயமாக இருந்தால் நான் போய்விடுகிறேன், ஓகே பை” என்று கூறியதும், சிறுமி கண்களில் கண்ணீருடன் “என்னைப் பிடிக்காதீர்கள்” என்று உருகிய குரலில் சொல்லியதும், காட்சி இன்னும் உருக்கியதாக மாறியது. வீடியோவில் அந்த சிறுமி மனிதரின் முகத்தைத் தொட்டு பார்த்ததும் பலரது இதயத்தையும் கணமாகியுள்ளது.
இந்த வீடியோவை யூடியூப்பில் @makwanam.5449 என்ற கணக்கில் பகிர்ந்துள்ளனர். அதில், “உலகம் இவ்வளவு மோசமாக மாறியதால், சிறுமிகள் கூட பயத்தில் வாழ்கிறார்கள். இதுவே சமூகத்தின் கசப்பான உண்மை” என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பரவி, “இது குழந்தைகளின் மனதில் பயத்தை விதைக்கும் சமூகத்தின் கண்ணாடி” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
