ஆந்திர மாநிலத்தின் கடப்பா நகரத்தில் வித்தியாசமான ஒரு பழக்கம் சமூகத்தில் பரவலாக நடைபெற்று வருகிறது. இங்கு, மறைவதற்கு முன்பே தங்கள் கல்லறையை முன்பதிவு செய்யும் நடைமுறை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மனைவி இறந்த பிறகு கணவரும், கணவர் இறந்த பிறகு மனைவியும், ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், சில தம்பதிகள் இருவருக்குமான இடத்தையும் முன்னதாகவே பதிவு செய்து வைத்துவிடுகின்றனர்.
இந்த கல்லறைத் தோட்டங்களில், “முன்பதிவு செய்யப்பட்ட பகுதி” என்ற பதாகைகளுடன் அந்த இடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதனால், இறந்த பின்பும் ஒருவர் ஒருவருடன் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற மனநிலை. உறவினர்கள் என்ன செய்வார்கள், எங்கே அடக்கம் செய்வார்கள் என்பதை யோசித்து தவிக்காமல், முன்கூட்டியே இடம் தயாரித்து வைப்பதன் மூலம் மனதிற்கு ஓரளவுக்கு நிம்மதியும் ஏற்படுகிறது.
தற்போது, சிறு சிறு விஷயங்களுக்காகவே தம்பதிகள் பிரிந்து செல்லும் கால சூழலில், “இறந்த பிறகாவது ஒன்றாக இருக்க வேண்டும்” என்ற எண்ணத்துடன் சிலர் மேற்கொள்ளும் இந்த முன்பதிவு சிந்தனை, சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுவருகிறது.
