நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பெருவிழா, நாளை (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
திருவிழா செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் வருகை தர உள்ளனர். பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை முன்னிட்டு, விழா காலத்தில் 10 நாட்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கொடியேற்ற தினத்தையொட்டி நாளை நாகை மற்றும் கீழ்வேளுர் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பி. ஆகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
