தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், என் மனசு தங்கம் மற்றும் திமிரு புடிச்சவன் போன்ற வெற்றி படங்களில் நடித்தும், கார் பந்தய வீராங்கனையாகவும் புகழ் பெற்றுள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலரை இன்ஸ்டாகிராம் வாயிலாக நேற்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவருடைய காதலரான ரஜித் இப்ரான் மாடலிங் துறையைச் சேர்ந்ததோடு, தொழில் அதிபராகவும் பணியாற்றி வருகிறார். இருவரும் விரைவில் திருமணத் திட்டங்களைப் பகிரவுள்ளதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த அறிவிப்பையடுத்து, திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இவர்களது ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
