“நாம்தான் கையில் போடுற சோப்பா இது?” – என்ற அதிர்ச்சியுடன் மக்கள் கோபப்படும் அளவுக்கு ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் கைகளை சுத்தம் செய்யவும், முகம் கழுவவும், குளிக்கவும் நாம் பயன்படுத்தும் அந்த சோப்புகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதைக் காட்சிப்படுத்தும் வீடியோ ஒன்று இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. @smartest.worker என்ற கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, சோப்புகள் தயாராகும் முழு செயல்முறையை ஆச்சரியமாகத் திறந்துவைக்கிறது.
வீடியோவின் தொடக்கத்தில் பார்ப்பவர்களுக்கு அது சோப்பை காட்டாமல் நூடுல்ஸா, குர்குரேதான் என்று சந்தேகம் வரும் வகையில் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. வெட்டப்பட்ட துகள்கள், குழாயாக மாறும் அமைப்புகள், பின்னர் அந்த துகள்கள் சோப்பாக மாற்றப்பட்டு பேக் செய்யப்படும் வரை முழுக்க ஒரு உணவுத் தயாரிப்பு போன்று இருக்கிறது. இதுவரை இந்த வீடியோவுக்கு 20 லட்சம் பார்வைகள், 19,000 லைக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் இதற்குப் பிறகுதான் சர்ச்சைகள் வெடிக்கின்றன.
View this post on Instagram
“>
“இதுக்கு சோப்பா சொல்றாங்க… கையில போட்டு சுத்தம் செய்யறதா இவங்களால தான் வைரஸ் பரவுது!” என்று ஒரு பயனர் கண்டித்துள்ளார். “தயாரிப்பாளர் கையுறைகள்கூட போட்டுக்கலையே” என்று மற்றொருவர் சுகாதார குறைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலர், “இதுதான் நம்ம தோலுக்கு அரிப்பு வர்ற காரணம்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளனர். சோப்பை வைத்து சுத்தம் செய்யும் நாம், அந்த சோப்பை எப்படி சுத்தமில்லாம தயாரிக்கறாங்கன்னு பார்த்தா தலைசுற்றுது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிர்ச்சியும், ஆத்திரமும், ஆராய்ச்சியும் கிளப்பி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
