தேர்வு என்பது பல குழந்தைகளுக்கும் ஒரு முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. அந்த நாளில் தங்களின் கடின உழைப்பு, பயிற்சி, நம்பிக்கை அனைத்தும் சோதிக்கப்படும் நேரமெனவே அவர்கள் அதை கடவுளின் துணையோடு கடக்க விரும்புகிறார்கள்.
இதை ஒட்டி, இன்ஸ்டாகிராமில் ashwini_maga_official என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், ஒரு சிறுவன் தேர்வு எழுத செல்லும் முன் வீட்டின் பூஜை அறையின் முன்பு இரண்டு கைகளை கூப்பி கடவுளிடம் உணர்ச்சிபூர்வமாக பிரார்த்தனை செய்வதையும், கடவுளிடம் தேர்வில் வெற்றி பெறுவதற்காக பணிவுடன் வேண்டுவதையும் காண முடிகிறது.
View this post on Instagram
“>
காணொளியில் அந்த சிறுவன், “இந்த நாளில் நீயே என்னுடன் இருப்பாய், என்ன பதில்களுக்கு நீயே எழுதணும்” என்ற நம்பிக்கையுடன் கடவுளை நோக்கி தலைவணங்குகிறான். அதன் பின் பூஜை அறையின் கதவை மெதுவாக மூடிவிட்டு, தேர்வு எழுத செல்லத் தயாராகிக் கொண்டிருக்கும் அவனது , குழந்தை மனதின் அப்பாவித்தனத்தையும், கடவுளில் இருக்கும்நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. மக்கள், “இவ்வளவு சின்சியரான நம்பிக்கை நம்மால் முடியாது, குழந்தை உண்மையிலேயே நம் நினைவுகளை கிளப்புகிறது” என்று தெரிவித்து வருகின்றனர்.
