தெருவில் நடந்து சென்ற பெண் மீது திடீரென காளை ஒன்று பாய்ந்து தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், அந்தக் காளை தனது கொம்புகளால் பெண்ணை பலமுறை தாக்கி, கட்டிடத்தின் கதவின் மீது மோதச் செய்கிறது. தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அந்தப் பெண்ணின் உயிர் கண நேரத்தில் ஆபத்தில் சிக்கியது.
இந்நிலையில், அச்சம்பவத்தைப் பார்த்த ஒருவர் எந்தவித தயக்கமும் இன்றி காளையின் கொம்பைப் பிடித்து விரைந்து சென்று பெண்ணை காப்பாற்றுகிறார். உயிரைப் பணயம் வைத்து செயல் பட்ட அந்த நபரின் துணிச்சல் பாராட்டைப் பெற்றுள்ளது.
मौत करीब थी पर किसी की बहादुरी ने जिंदगी लौटा दी pic.twitter.com/YSZq1SgXm8
— Reshma Memon (@ReshmaM15238489) August 25, 2025
“>
“மரணம் நெருங்கிய தருணத்தில், ஒருவரின் தைரியம் உயிரை மீட்டெடுத்தது” என்ற வாசகத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, வெகு குறுகிய நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகியுள்ளது.
