லக்னோவை சேர்ந்த மூன்று வயது குழந்தை ஒன்று  மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறி கீழே இரும்பு கேட்டில் விழுந்து விட்டது. அந்த விபத்தில் இரும்பு கம்பி குழந்தையின் கழுத்திலும் தோள்பட்டையிலும் ஆழமாகக் குத்தி, பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சைக்கு 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியதால், அவர்களால் அந்தத் தொகையை செலுத்த முடியவில்லை.

இதைத்தொடர்ந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், பெற்றோர்கள் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அந்த மருத்துவமனையில் ஒரு அனுபவமிக்க மருத்துவரான Ankur Pankaj  வெறும் 25,000 ரூபாய் செலவில் ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார். இந்த சம்பவம் X வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.