சமூக வலைதளங்களில் தற்போது விறுவிறுப்பாக வைரலாகும் வீடியோ ஒன்று நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் ஒருவர், வெள்ளை ஷர்ட், கருப்பு பேன்ட் போட்டுக்கிட்டு ஸ்கூட்டியில் சாலையில் சிக்னலில் நிற்கிறார். ஆனால், இதெல்லாம் சாதாரணம் தான். அதுக்கு மேல, அவர் காதில் பெண்கள் அணிவது போல் பெரிய ஜும்கா அணிந்திருப்பது தான் வீடியோவின் ஹைலைட். இதைப் பார்த்த பொதுமக்கள் சாலையிலேயே விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.
இந்த காமெடி காட்சியை யாரோ ஒருவர் டிராஃபிக் சிக்னல் பகுதியில் படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். @ashok\_alafa என்ற யூசர் பகிர்ந்த இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைத் தட்டிச்சென்றுள்ளது. ஹெல்மெட் போடாம ஜும்காவோட ஸ்டைலா ஸ்கூட்டி ஓட்டிய அந்த அங்கிள் செயலைப் பார்த்தவுடன் பலரும் ஜோக் அடிக்க தொடங்கினர்.
View this post on Instagram
வீடியோ பார்த்த நெட்டிசன்கள் தங்களது மனதை வெளிப்படுத்தி கமெண்டுகள் போட ஆரம்பித்து விட்டனர். “இந்த அங்கிள் பக்கா காமெடி பீஸ்!” என ஒருவர் எழுத, “எல்லா ரசிப்பையும் பெண்கள் மட்டும் அனுபவிக்கணுமா? நாமும் ரசிக்கறோம்!” என இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.5
