நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்ற மண்டல பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சிக்கு வரவிருக்கிறது” என உறுதிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த கூற்றைத் தொடர்ந்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி அமைப்பு மீதான விவாதம் மீண்டும் சீற்றமடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். கூட்டணிப் பங்கீட்டு விவகாரங்கள், ஆட்சி அமைப்பதற்கான முடிவு, இவை அனைத்தையும் இபிஎஸ் தான் தீர்மானிப்பார். மேலும், எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராகவும் அவர் தான் இருப்பார்” என கூறியுள்ளார்.
அமித் ஷாவின் கூற்றுக்கு பிறகு, நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு பாஜகவின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியதோடு, அதிமுகவுடன் பாஜக அணிதிருப்பது உறுதியானதா எனும் கேள்விக்கும் விளக்கம் அளித்துள்ளது. ஒரே கூட்டணியில் இருந்தாலும், கூட்டணி முடிவுகளை எடுப்பதில் தலைமை எந்தவிதத்தில் அமையும் என்பது குறித்து தற்போது சுடச்சுட அரசியல் விவாதம் நடந்து வருகிறது.
