இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், கவனக்குறைவால் நடந்த ஒரு விபத்து பதிவாகியுள்ளது. அந்த காணொளியில் , ஒரு பெண் தனது காரின் கதவை கவனமின்றி திறக்கிறார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒருவர், திறந்த கார் கதவில் மோதி தூக்கி வீசப்படுகிறார். இந்த நிலையில்  விபத்து நடக்கும் இடத்திற்கு ஒரு கனரக வாகனமும் வர தூக்கி வீசப்பட்ட நபர் அதன் அடியில் சிக்கிக் கொள்கிறார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக, இந்த பயங்கரமான விபத்தில் இருந்து அந்த நபர் உயிர் தப்பி கனரக வாகனத்தின் அடியில் இருந்து, அவர் பாதுகாப்பாக வெளியே வருகிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களைப் பதற வைக்கும் வகையில், ஒரு சிறிய தவறு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை காட்டுகிறது.

https://www.instagram.com/reel/DG7tB51ypsm/