தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் கரும்புச்சாறு கடை வைத்திருந்த ஒருவர் தனது அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த மாநாட்டின் மூலம் ஆறு மாதத்தில் சம்பாதிக்க வேண்டிய பணத்தை ஒரே நாளில் சம்பாதித்துவிட்டேன்.

அதேபோன்று கடை அமைப்பதற்கு ஒரு பைசா கூட எங்களிடம் கேட்கவில்லை. மேலும் பேசிய அவர், “மற்ற மாநாடுகளில் கடை வைத்திருந்தால், காவல்துறையினர் அல்லது சில தொண்டர்கள் கரும்புச்சாறு குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுவிடுவார்கள். ஆனால், தளபதி விஜய் அவர்கள் நடத்திய இந்த மாநாட்டில் அப்படி நடக்கவில்லை.

ஒவ்வொருவரும் கரும்புச்சாறுக்கு உரிய பணத்தை சரியாக கொடுத்துவிட்டார்கள். எதிர்காலத்தில் என் பொருளாதார நிலை மேம்பட்டால், தளபதி விஜய் 10 நாட்கள் மாநாடு நடத்தினாலும், அந்தப் பத்து நாட்களும் கரும்புச்சாறு இலவசமாக வழங்குவேன் என்று அந்த நபர் உற்சாகத்துடன் கூறினார்.