கரூர் மாவட்டம் தாண்டோணிமலை அருகே உள்ள ஊரணிமேடு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பெண்களை அழைத்து வைத்து நடத்தப்பட்ட பாலியல் தொழிலில் பாஜக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காவல்துறையின் ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் வெளியாகியுள்ளது. பாலியல் தொழிலுக்காக வீடு வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியதோடு, இது ஒரு திட்டமிட்ட அமைப்பாக இயங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களில் முக்கியமானவர் பாஜக நிர்வாகி ரகுபதி என்பது தெரியவந்ததுடன், அவருடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் நீதிமன்ற உத்தரவைடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
