சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா குறிமண்டி கிராமத்தை சேர்ந்த 24 வயதான கிரீஷ், அதேபகுதியில் வசிக்கும் தனது உறவினரான 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியதோடு, பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த கிரீஷ், சிறுமியுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.
முக்கியமாக, இது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் எனக் கூறி சிறுமியிடம் கடுமையாக எச்சரித்துள்ள கிரீஷ், இதனால் பெண் வெளியே எதையும் பகிரவில்லை. ஆனால் சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி ஏற்கனவே 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, அவர்களே நேரடியாக சிறுமியிடம் கேட்டதற்குப் பிறகு உண்மை வெளிச்சம் கண்டது.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் குண்டலுபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது கிரீஷ் தலைமறைவாகியுள்ள நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பிடிக்க தீவிர விசாரணை மற்றும் வலைவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
