ஒரு பெட்ரோல் பங்கில் நடந்த மோசடி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், ரூ.500 செலுத்தி பெட்ரோல் வாங்கினார். ஆனால் அவர் பதிவு செய்த வீடியோவில், பெட்ரோல் பம்ப் மீட்டரில் வெறும் ரூ.405 க்கான பெட்ரோல் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அந்த ஊழியர் யூனிஃபார்மில் இருந்தபடி பெட்ரோலை போடுகிறார். அப்போது வாடிக்கையாளர் 405 ரூபாய்க்கு தான் பெட்ரோல் போடப்பட்டுள்ளது என்று கூறியதற்கு அந்த ஊழியர் மழுப்பி அவரை திசை திருப்ப முயற்சி செய்கிறார். இதையடுத்து எதிரே நின்று இருந்தால் மற்றொரு வாலிபர் அவரை பாதுகாக்க நெருங்கி வருகிறார்.
View this post on Instagram
இது தனிநபரின் தவறு அல்ல, குழு வேலை என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்தனர். வீடியோவில் ‘Only 405 out of 500’ என்ற எழுத்து, நேரம் குறிப்பிடப்பட்ட மீட்டர் காட்சிகள் என அனைத்தும் உறுதியான ஆதாரமாக மாறி உள்ளது. இந்த வகையான மோசடிகள் “Short-Filling” என அழைக்கப்படுகிறது மற்றும் நாடெங்கிலும் பல வாடிக்கையாளர்கள் இதன் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதால், பெட்ரோல் நிரப்பும் போது வாடிக்கையாளர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பம்ப் மீட்டரை சரிபார்த்து, சந்தேகமான சூழ்நிலையைக் காணும்போது உடனடியாக புகார் செய்ய வேண்டும் என வலியுறுத்தும் இந்த வீடியோ, ஏமாற்றப்படாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
